தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 10691 people in Kerala were diagnosed with corona infection today

கேரளாவில் இன்று 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 1,11,083 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,94,800 லட்சமாக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று 85 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,258 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று 12,655 பேர் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கேரளாவில் தற்போது 1,11,083 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 46,56,866 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் இன்று 406 பேருக்கு கொரோனா; 637 பேர் டிஸ்சார்ஜ்
கர்நாடகாவில் தற்போது 10,154 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் இன்று 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 16,130 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. டெல்லியில் இன்று 29 பேருக்கு கொரோனா; 58 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 347 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. தடுப்பூசி போடாமல் இருக்க சாமியாடி நாடகமாடிய பெண்கள்
யாதகிரி அருகே கொரோனா தடுப்பூசி போடாமல் இருக்க அருள் வந்தது சாமியாடியது போல் நடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. தெலங்கானா, கோவாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தெலங்கானாவில் தற்போது 4,288 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.