தெலுங்கானா, உத்தரகாண்டில் நடமாடும் கோர்ட்டு அறிமுகம்


தெலுங்கானா, உத்தரகாண்டில் நடமாடும் கோர்ட்டு அறிமுகம்
x
தினத்தந்தி 10 Oct 2021 5:42 PM GMT (Updated: 10 Oct 2021 5:42 PM GMT)

நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடமாடும் கோர்ட்டு பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்களோ, குழந்தைகளோ நேரில் ஆஜராக முடியாத சூழ்நிலையில், அவர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்ய இந்த நடமாடும் கோர்ட்டுகள் பயன்படுத்தப்படும்.

மேலும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோரும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் உள்ள காணொலி வசதி வழியாக சாட்சியம் அளிக்கலாம். அப்படி சாட்சியம் அளிப்பது, கோர்ட்டு நடைமுறைக்கு சமமானதாக கருதப்படும். நடமாடும் கோர்ட்டுகள், கீழ்நிலை கோர்ட்டுகளாக கருதப்படும். இந்த கோர்ட்டில், சிசிடிவி கேமரா, லேப்டாப், பிரிண்டர், எல்.இ.டி. டி.வி., வெப் கேமரா, இன்வெர்ட்டர், ஸ்கேனர், யு.பி.எஸ்., கூடுதல் மானிட்டர், ஸ்பீக்கர் ஆகியவை இருக்கும்.


Next Story