தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவு; ஒரே நாளில் 18,132 பேருக்கு உறுதி + "||" + Corona exposure in the country continues to decline; Guaranteed to 18,132 people in a single day

நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவு; ஒரே நாளில் 18,132 பேருக்கு உறுதி

நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவு; ஒரே நாளில் 18,132 பேருக்கு உறுதி
இந்தியாவில் கடந்த 3 நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் சமீப நாட்களாக கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் ஒரே நாளில் 18,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இது நேற்று 18,166, நேற்று முன்தினம் 19,740, கடந்த 8ந்தேதி 21,257 மற்றும் கடந்த 7ந்தேதி 22,431 ஆக இருந்தது.  இதனால், தொற்று வித்தியாசம் கடந்த சில நாட்களில் ஆயிரத்திற்கும் கூடுதலாக தொடர்ந்து குறைந்து வருகிறது.  கடந்த 3 நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 193 பேர் (நேற்று 214) உயிரிழந்து உள்ளனர்.  இதனால், மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 50 ஆயிரத்து 782 ஆக உள்ளது.  உயிரிழந்தோர் விகிதம் 1.33% என்ற அளவில் உள்ளது.

21,563 பேர் குணமடைந்து சென்ற நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 93 ஆயிரத்து 478 ஆக உயர்ந்து உள்ளது.  இதனால், குணமடைந்தோர் விகிதம் 97.99% ஆக உள்ளது.  நாடு முழுவதும் 2,27,347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதி வருகையின்போது பணியில் இருந்த அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு
உத்தரகாண்டில் ஜனாதிபதி வருகையின்போது பணியில் ஈடுபட்டு இருந்த 7 அரசு அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. நெதர்லாந்தில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி
நெதர்லாந்து நாட்டில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. தனியார் மருத்துவக்கல்லூரியில் 182 மாணவர்கள்- பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில், 182 மாணவர்கள், பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் விடுதியில் தங்கி இருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் விடுதியில் தங்கி இருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. டெல்லியில் நடப்பு ஆண்டில் 7,128 டெங்கு பாதிப்புகள் உறுதி
டெல்லியில் நடப்பு ஆண்டில் 7,128 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.