தேசிய செய்திகள்

கர்நாடகாவின் கலபுரகியில் மாவட்டத்தில் மீண்டும் லேசான நில நடுக்கம் + "||" + Mild earthquake recorded again in Kalaburagi dist in Karnataka

கர்நாடகாவின் கலபுரகியில் மாவட்டத்தில் மீண்டும் லேசான நில நடுக்கம்

கர்நாடகாவின் கலபுரகியில்  மாவட்டத்தில் மீண்டும் லேசான நில நடுக்கம்
கர்நாடகாவின் கலபுரகியில் கடந்த 11 நாட்களில் ஏற்படும் 4-வது நிலநடுக்கம் இதுவாகும்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக விஜயாப்புரா மாவட்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தது. அதாவது கடந்த 1 மற்றும் 5-ந் தேதிகளில் விஜயாப்புரா மாவட்டம் பசவகல்யாண் தாலுகாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு, வீடுகள் குலுங்கியது. 

சில வீடுகளின் சுவர்களில் விரிசல்களும் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக பசவகல்யாணி்ல் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பள்ளியில் இருந்து வெளியே ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. விஜயாப்புராவை தொடர்ந்து நேற்று கலபுரகியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் கலபுரகியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இதனால் மக்கள் பீதி அடைந்தனர். ரிக்டர் அளவில் 2.8 ஆக நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த 11 நாட்களில் வடக்கு கர்நாடகாவில் ஏற்படும் 4-வது நிலநடுக்கம் இதுவாகும். 


தொடர்புடைய செய்திகள்

1. சிக்கிமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவு
சிக்கிமில் ரிக்டரில் 5.4 ஆக பதிவான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
2. பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு
பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. மிசோரத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
மிசோரம் மாநிலத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. அசாமில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
அசாமில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. ராஜஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
ராஜஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.