டெல்லியில் மேலும் 23 பேருக்கு கொரோனா


டெல்லியில் மேலும் 23 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Oct 2021 11:13 AM GMT (Updated: 11 Oct 2021 11:13 AM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை.  தொற்று பாதிப்பு விகிதம் 0.05 ஆக உள்ளது. அக்டோபர் மாதத்தில் தொற்று பாதிப்புக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த மாதத்தில் டெல்லியில் தொற்று பாதிப்புக்கு 5 பேர் உயிரிழந்து இருந்தனர். டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,39,218-ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து 14.13 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,089- ஆக உள்ளது. 


Next Story