பாக். ஆதரவு பயங்கரவாதத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - காஷ்மீர் காங். தலைவர்


பாக். ஆதரவு பயங்கரவாதத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - காஷ்மீர் காங். தலைவர்
x
தினத்தந்தி 11 Oct 2021 12:52 PM GMT (Updated: 11 Oct 2021 12:52 PM GMT)

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை தடுக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர், 

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்து மற்றும் சீக்கிய மதங்களை சேர்ந்த மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சூரங்கோட் பகுதியில் உள்ள டேரா கி ஹாலி கிராமத்தில் இன்று அதிகாலை பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுடனான மோதலில் ராணுவ அதிகாரி, 4 ராணுவ வீரர்கள் என 5 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் ராணுவம் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஜிஏ மீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் வெளியிட்ட அறிக்கையில், ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்தியது கோழைத்தனமான தாக்குதல். தேசத்திற்காக உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம். பாதுகாப்பு படையினருக்கும், அப்பாவி பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைக்கு குறைவைத்து மீண்டும் ஜம்மு-காஷ்மீரில் தலைதூக்கும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை தடுக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story