உள்துறை மந்திரி அமித்ஷா விரைவில் ஜம்மு காஷ்மீர் பயணம்


உள்துறை மந்திரி அமித்ஷா விரைவில் ஜம்மு காஷ்மீர் பயணம்
x
தினத்தந்தி 11 Oct 2021 2:25 PM GMT (Updated: 11 Oct 2021 2:54 PM GMT)

உள்துறை மந்திரி அமித்ஷா 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த இருவாரங்களில் ஜம்மு காஷ்மீர், கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 14 ஆம் தேதி கோவா செல்லும் அமித்ஷா, தடயவியல் ஆய்வகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் மாநில அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

இதையடுத்து, 15 ஆம் தேதி முதல்  17 ஆம் தேதி வரை  அந்தமான் நிகோபார் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா, 23 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். 

25 ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா, காஷ்மீர் பள்ளத்தாக்கின் கிராமப் பகுதிகளுக்கு சென்று வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். 

யூனியன் பிரதேசத்தின் உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். ஜம்மு காஷ்மீர் சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு அக்டோபர் 30-ல் உத்தரகாண்ட் செல்கிறார். 


Next Story