தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநில பா.ஜனதா மந்திரி காங்கிரசில் சேர்ந்தார் + "||" + Uttarakhand BJP leader Yashpal Arya, son Sanjeev Arya join Congress

உத்தரகாண்ட் மாநில பா.ஜனதா மந்திரி காங்கிரசில் சேர்ந்தார்

உத்தரகாண்ட் மாநில பா.ஜனதா மந்திரி காங்கிரசில் சேர்ந்தார்
பா.ஜனதா ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது
புதுடெல்லி,

பா.ஜனதா ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில், அம்மாநில போக்குவரத்து மந்திரி யஷ்பால் ஆர்யா, நேற்று திடீரென காங்கிரசில் சேர்ந்தார். அவருடைய மகனும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான சஞ்சீவும் காங்கிரசில் சேர்ந்தார்.

நேற்று டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தனர். பின்னர், டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில், மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். யஷ்பால் ஆர்யாவும், சஞ்சீவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.