தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 14,313 பேருக்கு தொற்று! + "||" + India Sees Lowest Daily COVID-19 Cases (14,313) Since Early March

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 14,313 பேருக்கு தொற்று!

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 14,313 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதன்முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது.
புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன்படி நேற்று முன் தினம் 18,166 பேருக்கும், நேற்று 18,132 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், இன்று புதிதாக 14,313 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 6,996 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,39,85,920 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,50,963 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்போர் விகிதம்1.33 % ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,579  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,20,057 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.04 % ஆக உள்ளது.  

மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,14,900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 95,89,78,049 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65,86,092 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 11,81,766 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 58,50,38,043  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
ரஷியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
2. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தெற்காசிய கால்பந்து போட்டி: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் நேபாள அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது .
4. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,470- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,470- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியா-டென்மார்க் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா- டென்மார்க் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகி உள்ளன.