தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாத தேடுதல் வேட்டை தீவிரம் + "||" + Terrorist search hunt intensifies in Kashmir

காஷ்மீரில் பயங்கரவாத தேடுதல் வேட்டை தீவிரம்

காஷ்மீரில் பயங்கரவாத தேடுதல் வேட்டை தீவிரம்
காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாத தேடுதல் வேட்டையில் போலீசார் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு,

காஷ்மீரில் சமீப காலங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.  பொதுமக்களை இலக்காக கொண்டு அடிக்கடி தாக்குதல்கள் நடந்து வருகின்றன.  சமீபத்தில் ஸ்ரீநகரில் பள்ளியொன்றில் புகுந்த பயங்கரவாதிகள் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் மற்றும் பள்ளி பெண் முதல்வர் என 2 பேரை வெளியே இழுத்து போட்டு, துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில் அவர்கள் இருவரும் சம்பவ பகுதியிலேயே உயிரிழந்தனர்.

இதேபோன்று, கடந்த செவ்வாய் கிழமை 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரத்திற்குள் பள்ளி மீது தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பயங்கரவாத தாக்குதல்களில் 7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.  இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

என்.ஐ.ஏ. அதிகாரிகளும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், காஷ்மீர் போலீசார், பாதுகாப்பு படையினருடன் இணைந்து சோபியான் மாவட்டத்தில் பீரிபோரா பகுதியில் பயங்கரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்.
2. காஷ்மீர் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
3. உத்தர பிரதேசத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரம்
உத்தர பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 25 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 250க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
4. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கேரளாவில் இரவு ஊரடங்கில் வாகன சோதனை தீவிரம்
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில் இரவு ஊரடங்கில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
5. நடிகை மீரா மிதுன் மீது 7 பிாிவுகளில் வழக்குப்பதிவு கைது செய்ய போலீசார் தீவிரம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.