தேசிய செய்திகள்

காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் கைது + "||" + One person detained in the weapon-dropping case of Phallian Mandal in Kashmir

காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் கைது

காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன்  தொடர்புடைய நபர் கைது
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் 5 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜம்முவின் பஹலின் மண்டல் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டார். 

கடந்த 2-ம் தேதி பஹலின் மண்டல் பகுதியில் டிரோன் மூலம் ஏகே 47 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்தி வந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு ஆயுத விநியோகம் செய்ய முயற்சித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் பாதுகாப்புபடையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
2. காஷ்மீர் என்கவுண்டர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
3. காஷ்மீரில் பொதுமக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் - பிரியங்கா காந்தி
காஷ்மீரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
4. காஷ்மீர்: 2 ஆசிரியர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காஷ்மீரில் பள்ளிக்கூடத்திற்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள் அங்கு இருந்த ஆசிரியர்கள் 2 பேரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச்சென்றனர்.
5. காஷ்மீர்: பள்ளிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 2 ஆசிரியர்கள் பலி
காஷ்மீரில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.