டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு


டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 9:34 AM GMT (Updated: 12 Oct 2021 9:34 AM GMT)

டெல்லியில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில்  அக்டோபர் மாதத்தில் மட்டும் 100 பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  

பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  கடந்த செப்டம்பரில் 217 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அக்டோபரில் கடந்த 10 நாள்களில் மட்டும் 139 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நடப்பு ஆண்டில் மொத்த பாதிப்பு 480 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இங்கு டெங்குவினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Next Story