மராட்டியத்தில் இன்று 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டியத்தில் இன்று 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 12 Oct 2021 4:24 PM GMT (Updated: 12 Oct 2021 4:24 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் இன்று 2,069 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, மராட்டியத்தில் இன்று 2 ஆயிரத்து 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்து 81 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3 ஆயிரத்து 616 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 64 லட்சத்து 7 ஆயிரத்து 936 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 30 ஆயிரத்து 525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.

Next Story