தேசிய செய்திகள்

பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Extension of night curfew in Bengaluru

பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு

பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு
பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 25-ந் தேதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் கடந்த 10 மாதங்களில் 3 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்
கடந்த 10 மாதங்களில் பெங்களூருவில் ரூ.45 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பெங்களூருவில் போலீஸ் குடியிருப்பில் திடீர் விரிசல் - 32 குடும்பத்தினரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு
பெங்களூருவில் போலீஸ் குடியிருப்பில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த கட்டிடத்தில் வசித்து வரும் 32 குடும்பத்தினரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
3. பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை
பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழையால் இந்திராநகரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 10 வாகனங்கள் சேதம் அடைந்தன. மேலும் மெஜஸ்டிக் செல்லும் வழியில் உள்ள ரெயில்வே மேம்பால சுவரும் இடிந்து விழுந்ததால் பரபரப்பு உண்டானது.
4. பெங்களூருவில் கனமழை கொட்டியது
பெங்களூருவில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கி நின்றது.
5. பெங்களூருவில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
கோலார் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டுக்கு வரத்து வெகுவாக குறைந்ததன் எதிரொலியாக பெங்களூருவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்த்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் ஆதங்கம் அடைந்திருக்கிறார்கள்.