திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துலாபாரம் கொடுத்து ஜெகன்மோகன் ரெட்டி வழிபாடு


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துலாபாரம் கொடுத்து ஜெகன்மோகன் ரெட்டி வழிபாடு
x
தினத்தந்தி 12 Oct 2021 7:01 PM GMT (Updated: 12 Oct 2021 7:01 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு நிகரான அரிசியை துலாபாரம் கொடுத்து ஜெகன்மோகன் ரெட்டி வழிபாடு செய்தார்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. 5-வது நாளான நேற்று முன்தினம் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து தரிசனம் செய்தார்.

இதையடுத்து 6-வது நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்திலும், இரவில் கஜ வாகனத்திலும் மலையப்பசாமி எழுந்தருளினார். இதில் ஆந்திரமாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டு தரிசனம் செய்தார். வாகுல மாதாகோவிலை சுற்றிவந்து, விமானவெங்கடேஸ்வர சாமி, பாஷ்ய கார்ல சன்னிதி, யோக நரசிம்ம சாமியை தரிசித்தார். அப்போது அவர் தனது எடைக்கு சமமான 78 கிலோ அரிசியை துலா பாரம் கொடுத்து பிரார்த்தனை செய்தார்.

Next Story