கேரளாவில் சுற்றுலா பயணிகளுக்கான சொகுசு கேரவன்கள் அறிமுகம் !


கேரளாவில் சுற்றுலா பயணிகளுக்கான சொகுசு கேரவன்கள் அறிமுகம் !
x
தினத்தந்தி 12 Oct 2021 10:46 PM GMT (Updated: 12 Oct 2021 10:46 PM GMT)

கேரளாவில் பாரத் பென்ஸ் நிறுவனத்தின் சுற்றுலா கேரவன் வாகனத்தை சுற்றுலாத்துறை மந்திரி அறிமுகப்படுத்தி வைத்தார்.

திருவனந்தபுரம்,

கேரளாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பாதுகாப்பான இயற்கைக்கு மிக நெருக்கமான பயண அனுபவத்தை உறுதி செய்யும் வகையில்  கேரளா மாநில அரசு செப்டம்பர் 15ம் தேதி அன்று ஒரு விரிவான கேரவன் சுற்றுலா கொள்கையை வெளியிட்டது.

அதன் ஒரு பகுதியாக, கேரள சுற்றுலாத்துறை மந்திரி பி ஏ முஹம்மது ரியாஸ் மற்றும் போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜு ஆகியோர் இணைந்து  பாரத் பென்ஸ் நிறுவனத்தின் சுற்றுலா கேரவனை மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் வைத்து நேற்று அறிமுகப்படுத்தினர்.

கேராளாவில் கேரவன் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே வாரத்தில் இந்த கேரவன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கேராளாவில் சுற்றுலா கேரவன் கொள்கையின் கீழ், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனியார் நபர்கள் தங்களுடைய கேரவன் வாகனங்களை வெளியிட தயாராக உள்ளனர்.கேரவன் கொள்கை  இதுவரை அறியப்படாத சுற்றுலா தளங்களின் முகத்தை மாற்றும் என்று மந்திரி ரியாஸ் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா கேரவன்கள் பயணம் செய்வதற்காகவும் தங்குவதற்காகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் ஆகும். 
கேரவன் பூங்காக்கள் இந்த வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் ஆகும். சோபா, படுக்கை, குளிர்சாதன பெட்டி மற்றும் மைக்ரோவேவ் கொண்ட சமையலறை, டைனிங் டேபிள், கழிவறை, ஏ.சி, இண்டர்நெட், சார்ஜிங் வசதி மற்றும் ஜிபிஎஸ் போன்ற அனைத்து வசதிகளும் கேரவன் வாகனங்களில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story