தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை + "||" + Phase 3 testing of booster vaccine soon in India

இந்தியாவில் விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை

இந்தியாவில் விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை
இந்தியாவில் விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,

ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ என்ற மருந்து நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரண்டில் எந்த தடுப்பூசியின் 2 ‘டோஸ்’களையும் செலுத்திக்கொண்டவர்கள் இந்த கோர்பேக்சஸ் தடுப்பூசியை 3-வது பூஸ்டர் டோசாக போட்டுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசியை 18 முதல் 80 வயதானவர்களுக்கு செலுத்தலாம். இதன் 3-வது கட்ட பரிசோதனையை நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், பலரது உடலில் அதன்மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து வருவதால், சில நாடுகள் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடத்தொடங்கி உள்ளன. வேறு சில நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

இதை தனது விண்ணப்பத்தில் பயாலஜிக்கல்-இ நிறுவனம் சுட்டிக்காட்டி, கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைக்கு விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதற்கான அனுமதி கிடைத்து விடும் எனவும், அதன்பின்னர் 3-வது கட்ட பரிசோதனை தொடங்கி விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 14,313 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதன்முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது.
2. தெற்காசிய கால்பந்து போட்டி: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் நேபாள அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது .
3. இந்தியா-டென்மார்க் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா- டென்மார்க் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகி உள்ளன.
4. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 93 கோடியை கடந்தது
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 93 கோடியை கடந்துள்ளது.
5. மகளிர் ஹாக்கி புரோ லீக் :இந்தியா - ஸ்பெயின் அணிகள் தேர்வு
மாற்று அணிகளாக தரவரிசையில் அடுத்து இருக்கும் இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் தேர்வாகியுள்ளது