தேசிய செய்திகள்

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 96.43 கோடியாக உயர்வு + "||" + Over 96 crore Covid vaccine doses administered in India so far

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 96.43 கோடியாக உயர்வு

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 96.43 கோடியாக உயர்வு
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 96.43 கோடியை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. முதல்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது.

இதேபோல் மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. அதன்பின்னர், மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 96 கோடியை தாண்டியுள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 50 லட்சத்து 63 ஆயிரத்து 845 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 96 கோடியே 43 லட்சத்து 79 ஆயிரத்து 212 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் நோய்..! அதிபரின் சர்ச்சை பேச்சு!
தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பிய பிரேசில் அதிபரின் வீடியோ பதிவு பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் இருந்து நீக்கப்பட்டது.
2. சென்னையில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் விதவிதமான பரிசு
சென்னையில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் விதவிதமான பரிசு வழங்கப்பட்டது. மாநகராட்சியின் கவனம் ஈர்க்கும் நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிகிறது.
3. மதுரையில் ஒரே நாளில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரையில் நேற்று 1200 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
4. 81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் 81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
5. 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு
100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.