தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜியின் வடிவத்தில் நாடு மாற்றத்தை எதிர்பார்க்கிறது - கோவா எம்.எல்.ஏ + "||" + The country expects a change in the form of Mamata Banerjee - Goa MLA Prasad Konkar

மம்தா பானர்ஜியின் வடிவத்தில் நாடு மாற்றத்தை எதிர்பார்க்கிறது - கோவா எம்.எல்.ஏ

மம்தா பானர்ஜியின் வடிவத்தில் நாடு மாற்றத்தை எதிர்பார்க்கிறது - கோவா  எம்.எல்.ஏ
கோவா எம்.எல்.ஏ பிரசாத் கோன்கர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர் மம்தா பானர்ஜியையும் பாராட்டி பேசியுள்ளார்.
பனாஜி,

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் முன்னிலையில் கோவாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ கோன்கர், தற்போது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று தெளிவுபடுத்தினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவாவில் பாஜக, மக்கள் விரோதக் கொள்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இந்த அரசாங்கத்தின் கீழ் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். மேற்கு வங்காளத்தில் பாஜகவை மம்தா எப்படி எதிர்த்துப் போராடினார் என்பதை நாம் பார்த்தோம். இந்த நிலையில் நாடு மம்தா பானர்ஜியின் வடிவத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கிறது என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கோவாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்துள்ளது. கோவாவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான லூய்சின்ஹோ பலேரோ சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவாவில் வீடு வாங்கிய ராஷ்மிகா
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெற்றி பெற்ற கீதா கோவிந்தம் படத்தில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார்.
2. ஜார்க்கண்டிலிருந்து கோவாவுக்கு நேரடி ரயில்; இந்திய ரயில்வே அறிமுகம்
ஜார்க்கண்டிலிருந்து கோவாவுக்கு வாரம் ஒருமுறை செல்லும் ஜசிதிக்-வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸ் நேரடி ரயிலை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
3. கோவா மாநில தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற காங்கிரஸ் கோரிக்கை
கோவா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி குணாலை மாற்றுமாறு கோவா காங்கிரஸ் கோரிக்கை.
4. கோவாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணம்
கோவாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 5-ந்தேதி முதல் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
5. கோவாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை: கோவா சுகாதார மந்திரி
கோவா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 மணி நேரத்துக்குள் 26 கொரோனா நோயாளிகள் இறந்து விட்டதாக கடந்த மே 11-ந்தேதி மாநில சுகாதார மந்திரி விஷ்வஜித் ராணே கூறியிருந்தார்.