தேசிய செய்திகள்

மும்பையில் நேற்று புதிதாக 410 பேருக்கு கொரோனா + "||" + Corona for 410 new people in Mumbai yesterday

மும்பையில் நேற்று புதிதாக 410 பேருக்கு கொரோனா

மும்பையில் நேற்று புதிதாக 410 பேருக்கு கொரோனா
தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை.
மும்பை,

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 410 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 7 லட்சத்து 48 ஆயிரத்து 168 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 162 ஆக உள்ளது. தலைநகர் மும்பையில் தற்போது 5 ஆயிரத்து 75 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதேபோல ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. இதுநாள் வரையில் தாராவியில் 7 ஆயிரத்து 119 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 6 ஆயிரத்து 677 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25 பேர் மட்டும் நோய் தொற்றுக்காக சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் நேற்று 175 பேருக்கு கொரோனா; 381 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 2,456 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. “10 கோடி பேரை வறுமையில் தள்ளிய கொரோனா” - ஆண்டனியோ குட்டரெஸ் தகவல்
கொரோனா பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளி விட்டது என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.90 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.62 கோடியாக உயர்ந்துள்ளது.
4. ஒடும் ரெயிலில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 8 பேர் கைது
லக்னோவில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளையர்களால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. மும்பையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது; பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை
மும்பையில் வரலாறு காணாத வகையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டி உள்ளது. பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.