தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மந்திரிக்கு கொரோனா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Oct 2021 1:28 AM GMT (Updated: 14 Oct 2021 1:28 AM GMT)

தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஐதராபாத். 

தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீர சமிதி மந்திரிசபையில் பிற்பட்டோர் நலத்துறை, உணவு, நுகர்பொருள் வினியோகத்துறை மந்திரி பதவி வகிப்பவர் கங்குல கமலேக்கர் (வயது 53).

அங்கு 30-ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள ஹூசுராபாத் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் கங்குல கமலேக்கர் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில் அவர் காய்ச்சலால் அவதிப்பட்டார். அவருக்கு கொரோனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதயைடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன்னோடு சமீபத்தில் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story