தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் வயதான பெண்கள் பங்கேற்ற ஓட்டப் பந்தயம் + "||" + 18 elderly women participated in 'Lota Daud' held by Bhopal district

மத்திய பிரதேசத்தில் வயதான பெண்கள் பங்கேற்ற ஓட்டப் பந்தயம்

மத்திய பிரதேசத்தில் வயதான பெண்கள் பங்கேற்ற ஓட்டப் பந்தயம்
மத்திய பிரதேசத்தில் வயதான பெண்கள் கையில் பாத்திரத்துடன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றனர்.
போபால்,

மத்திய பிரதேசத்தில் வயதான பெண்கள் கையில் பாத்திரத்துடன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி அம்மாநிலத்தின் பாண்டா கிராமத்தில் நேற்று நடைபெற்றது. போபால் மாவட்ட நிர்வாகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

திறந்த வெளியில் மலம் கழிப்பதை குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஓட்டப் பந்தயம்  நடைபெற்றது. இதில் வயது முதிர்ந்த பெண்கள் 18 பேர் பங்கேற்றனர்.

இந்த  ஓட்டப் பந்தயத்தின் மூலம் எங்கள் மருமகள்களிடம், திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டாம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஏனெனில், இப்போது எல்லா வீடுகளிலும் கழிவறைகள் உள்ளன என்று ஒரு போட்டியாளர் தெரிவித்தார்.