பிரம்மோற்சவம் 8-வது நாள் விழா: தங்க குதிரை மீது கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி


பிரம்மோற்சவம் 8-வது நாள் விழா: தங்க குதிரை மீது கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி
x
தினத்தந்தி 14 Oct 2021 6:21 PM GMT (Updated: 14 Oct 2021 6:21 PM GMT)

ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் 8-வது நாள் விழாவில் தங்க குதிரையின் மீது கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் 8-வது நாளான இன்று, காலை 8 மணிக்கு மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகளால் தேர்த் திருவிழா கோவில் வளாகத்திலேயே நடைபெறுவதால், சர்வ பூபால வாகனம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

அதில் மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து இன்று இரவு தங்க குதிரையின் மீது கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். அப்போது வேத மந்திரங்கள் முழங்க ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

Next Story