மும்பையில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம் - மாநகராட்சி அறிவிப்பு


மும்பையில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம் - மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2021 10:21 PM GMT (Updated: 14 Oct 2021 10:21 PM GMT)

மும்பையில் இன்று(வெள்ளிக்கிழமை) கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் மாநகராட்சி சார்பில் 309 முகாம்கள், மாநில அரசு சார்பில் 20 முகாம்கள் என மொத்தம் 374 முகாம்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 13 ஆம் தேதி வெளியான நிலவரத்தின்படி, மும்பையில் இதுவரை ஒரு கோடியே 33 லட்சத்து 13 ஆயிரத்து 138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 47 லட்சத்து 52 ஆயிரத்து 723 பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மும்பை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மும்பையில் இன்று(வெள்ளிக்கிழமை) கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தடுப்பூசிகள் போதுமான அளவுக்கு கையிருப்பு உள்ளதாகவும், தடுப்பூசி முகாம்களில் நாளை(சனிக்கிழமை) முதல் மீண்டும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் மும்பை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று நிறுத்தப்படுவது ஏன் என்பது குறித்த தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தசரா பண்டிகை காரணமாக தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Next Story