மக்கள் தொகையை கட்டுப்படுத்த கொள்கை இருக்க வேண்டும்: மோகன் பகவத்


மக்கள் தொகையை கட்டுப்படுத்த கொள்கை இருக்க வேண்டும்: மோகன் பகவத்
x
தினத்தந்தி 15 Oct 2021 5:51 AM GMT (Updated: 2021-10-15T11:21:34+05:30)

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுகிறது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

நாக்பூர்,

ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நடைபெற்ற தசரா பண்டிகை விழாவில் பேசிய மோகன் பகவத் கூறியதாவது;- “நாட்டில் மக்கள் தொகை கொள்கை மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அதேபோல், இந்தக் கொள்கை அனைவருக்கும் சமமாக வகுக்கப்பட வேண்டும். மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது.

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுகிறது. சாதி மத அடிப்படையில் பிரிவினைகள் தூண்டிவிடப்படுகின்றன. அமைதியை நிலைநாட்டி தேசத்தை வலுப்படுத்த வேண்டும். நாட்டின் பிரிவினை சோகமான வரலாறு. இழந்த ஒருமைப்பாடு, ஒற்றுமையை மீட்டெடுக்க பிரிவினை வரலாற்றின் உண்மையை எதிர்கொள்ள வேண்டும்.  புதிய தலைமுறையினர் அந்த வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் தற்போதைய வரலாறு, மதம், பாரம்பரியங்களை கண்டிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

தலீபான்களின் வரலாறு நமக்கு தெரியும். தலீபான்களுக்கு தற்போது சீனாவும் பாகிஸ்தானும் ஆதரவு அளிக்கின்றன. தலீபான்கள் மாறினால் கூட பாகிஸ்தான் மாறாது. இந்தியா மீதான சீனாவின் எண்ணம் மாறிவிட்டதா? நமது எல்லைப் பாதுகாப்பு வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஓடிடி தளங்களை பொறுத்தவரை எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கொரோனாவுக்கு பிறகு சிறார்களிடம் கூட செல்போன்கள் உள்ளன. போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதை நாம் எப்படி தடுப்பது? இதுபோன்ற தொழில்களில் கிடைக்கும் பணம் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் கட்டுபடுத்தப்பட வேண்டும்” என்றார்.


Next Story