மாநிலங்களுக்கு 100 கோடிகளுக்கு மேல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்


மாநிலங்களுக்கு 100 கோடிகளுக்கு மேல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 15 Oct 2021 7:43 AM GMT (Updated: 15 Oct 2021 7:43 AM GMT)

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரையில் 100 கோடிகளுக்கு மேல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 10.53 கோடி தடுப்பூசிகளுக்கு மேல் இருப்பு வைத்துள்ளன. 

அதிக தடுப்பூசிகள் கிடைப்பதன் மூலமும், கிடைக்கும் தடுப்பூசிகளின் அளவுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வதன் மூலமும், அவர்களால் சிறந்த திட்டமிடலை செயல்படுத்த முடிவதாகவும் இதன் மூலம் தடுப்பூசி இயக்கம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Next Story