தற்போது மன்மோகன் சிங்கின் உடல்நிலை எப்படி உள்ளது?


தற்போது மன்மோகன் சிங்கின் உடல்நிலை எப்படி உள்ளது?
x
தினத்தந்தி 15 Oct 2021 8:55 AM GMT (Updated: 15 Oct 2021 8:55 AM GMT)

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை பற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 89), கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, குணம் அடைந்தார். 

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக அவர் காய்ச்சலாலும், உடல் சோர்வாலும் அவதியுற்று வந்துள்ளார். இதனையடுத்து அவர் கடந்த புதன்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், தற்போது அவரது உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், டாக்டர் மன்மோகன் சிங் நல்ல உடல் நலத்துடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் வெளியிட்டு உள்ள செய்தியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது.  அவர் உடல்நலம் தேறி வருகிறார் என தெரிவித்து உள்ளது.


Next Story