தேசிய செய்திகள்

இந்தியாவை உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக மாற்றுவதே குறிக்கோள் - பிரதமர் மோடி + "||" + PM Modi's Big Defence Move To "Make India World's Biggest Military Power

இந்தியாவை உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக மாற்றுவதே குறிக்கோள் - பிரதமர் மோடி

இந்தியாவை உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக மாற்றுவதே குறிக்கோள் - பிரதமர் மோடி
இந்தியாவை உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

நாட்டின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் சுயசார்பை மேம்படுத்தும் வகையில், 41 ஆயுத தொழிற்சாலைகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் 7 பாதுகாப்பு நிறுவனங்களாக மாற்றப்பட்டு உள்ளன.

அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும்  7 பாதுகாப்பு நிறுவனங்களை துவக்கி வைத்து  பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: -

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் பல பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் இது முன்பை இருந்ததை விட அதிக வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் கொண்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற தேவை இருந்த போதும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை.

சுயசார்பு இந்தியா' கொள்கையின் கீழ், இந்தியாவை தனது சொந்த பலத்தில் உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதையும், நவீன ராணுவ தொழிற்சாலைகளை உருவாக்கி மேம்படுத்துவதுமே, நாட்டின் குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

கடந்த 7 ஆண்டுகளில், இந்த தீர்மானத்தையும், 'மேக் இன் இந்தியா' என்ற தாரக மந்திரத்தையும் நோக்கி தேசம் சென்றுள்ளது. புதிய எதிர்காலத்திற்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, நீண்ட காலமாக கிடப்பில் இருந்த திட்டங்கள் முடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த 7 நிறுவனங்களும் தங்கள் பணி காலத்தில் 'ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கு' முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்கால தொழில்நுட்பத்தில் நீங்கள் முன்னிலை வகிக்க வேண்டும், ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குங்கள்  என பிரதமர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் பயணம்; பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பில் டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தட சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
2. பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவ கவுடா சந்திப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்துப் பேசினார்.
3. நாடாளுமன்றத்தில் ‘அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார்’ - பிரதமர் மோடி உறுதி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் மோடி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5. ஒமிக்ரான் அச்சுறுத்தல்: கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்பகுதிகளை உருவாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.