தேசிய செய்திகள்

தசரா ஊர்வலத்தில் வாகனம் புகுந்தது; பக்தர் பலி; 20 பேர் காயம் + "||" + Chhattisgarh: 1 dead as speeding vehicle ploughs into religious procession

தசரா ஊர்வலத்தில் வாகனம் புகுந்தது; பக்தர் பலி; 20 பேர் காயம்

தசரா ஊர்வலத்தில் வாகனம் புகுந்தது; பக்தர் பலி; 20 பேர் காயம்
சத்தீஷ்கார் மாநிலம் பதால்கோன் நகரில் நேற்று தசரா ஊர்வலம் நடந்தது.
ராய்ப்பூர், 

சத்தீஷ்கார் மாநிலம் பதால்கோன் நகரில் நேற்று தசரா ஊர்வலம் நடந்தது. நூற்றுக்கணக்கானோர் ஊர்வலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு வாகனம் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் அடையாளம் தெரியாத ஒருவர் பலியானார். 20 பேர் காயமடைந்தனர். மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

ஆத்திரமடைந்த மக்கள், இறந்தவரின் உடலை இந்திரா சதுக்கத்தில் வைத்து, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட கலெக்டர் நேரில் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ரூ.4 லட்சம் இழப்பீடு பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார். 

சம்பவம் தொடர்பாக உதவி சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, மோதிய வாகனத்தில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மத்தியபிரதேசத்தை சேர்ந்த அவர்கள், கஞ்சாவை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஷ்கரில் பெட்ரோல், டீசல் மீதான ’வாட்' வரி குறைப்பு
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஷ்கரில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
2. சத்தீஷ்காரில் 9 நக்சலைட்டுகள் சரண்
சத்தீஷ்காரில் 9 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர்.
3. சத்தீஷ்கரில் 14 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
சத்தீஷ்கரில் 14 நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.
4. பக்தர்கள் மீது வேகமாக மோதிய கார்: ஒருவர் பலி என தகவல்
மத ஊர்வலத்தில் கடந்துகொண்டவர்களின் மீது கார் வேகமாக மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் படுகாயமடைந்தனர்.
5. சத்தீஷ்கர்: டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி
சத்தீஷ்கரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.