தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு + "||" + Announcement of the date for the election of the Congress President

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான தேதி பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
புதுடெல்லி

ராகுல் காந்தி காங்கிரஸ்  கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பை சோனியா காந்தி வகித்து வருகிறார்.  இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டி கட்சியின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என குலாம் நபி ஆசாத், கபில்சிபல் உள்ளிட்ட 23 காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்கள். இந்த கருத்துகளை தெரிவித்தமைக்காக கபில்சிபல் வீட்டு முன்பாக அவ்வப்போது காங்கிரசார் கூடி எதிர்ப்பு முழக்கமும் எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடியது காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேசும் போது கூறியதாவது;-

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பூரண குணமடைய தான் பிரார்த்தனை செய்கிறேன்.

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதற்கு அடையாளம் தான் பல ஆண்டுகளாக சேமித்த இந்திய சொத்துகளை விற்கும் மத்திய அரசின் முடிவு.

காங்கிரஸ் உட்கட்சி  தேர்தலை நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று இறுதி செய்யப்படுகிறது.கொரோனா காரணமாக கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்த சூழலில் கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தேர்தலை நடத்த கோரிக்கை வைத்து வந்தனர்.  எனவே இன்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.

நான் சொல்வதற்கு நீங்கள் அனுமதித்தால், முழு நேர காங்கிரஸ் தலைவராக இருக்கிறேன்.  நான் ஒத்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். நாம் தேசிய அளவில் கூட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம். பாராளுமன்றத்திலும் நாம் மூலோபாயத்தை ஒருங்கிணைத்து செயல்படுகிறோம்.  ஊடகங்கள் மூலம் என்னிடம் பேச வேண்டிய அவசியமில்லை. கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு சுதந்திரமான மற்றும் நேர்மையான விவாதம் வேண்டும்.

ஆனால் இந்த அறையின் நான்கு சுவர்களுக்கு வெளியே தொடர்பு கொள்ள வேண்டியது காரிய கமிட்டியின் கூட்டு முடிவாக இருக்க வேண்டும்.

முழு அமைப்பும் மறுமலர்ச்சியை விரும்புகிறது ... ஆனால் இதற்கு ஒற்றுமையும் கட்சியின் நலன்களையும் முதன்மையாக வைத்திருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அதற்கு சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை. 2019 ல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இருந்த நிலையில் திரும்ப வேண்டும் என்று காரிய கமிட்டி கூட்டம் என்னிடம் கேட்டதிலிருந்து நான் இடைக்கால காங்கிரஸ் தலைவராக இருந்தேன் என்பதை நான் தீவிரமாக உணர்கிறேன்.

இன்று ஒருமுறை தெளிவை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம். முழு அளவிலான நிறுவன தேர்தல்களுக்கான அட்டவணை உங்கள் முன் இருக்கும் பொதுச்செயலாளர் (அமைப்பு) (கே.கே.) வேணுகோபால், முழு செயல்முறையையும் பின்னர் உங்களுக்கு விளக்குவார் என கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 2022ம் ஆண்டு ஆகஸ்டு 21ந்தேதி மற்றும் வருகிற 2022ம் ஆண்டு செப்டம்பர் 20ந்தேதிகளுக்கு இடையே நடைபெறும்.

கட்சியின் உயர்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை மிக பெரிய அளவில் பயிற்சி திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.  இதன்படி, கட்சியின் அனைத்து அளவிலான தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு, கட்சியின் செயற்திட்டங்கள், கொள்கைகள், கட்சி தொண்டர் ஒருவரின் எதிர்பார்ப்புகள், அடிமட்ட அளவிலான தகவல்கள், தேர்தல் மேலாண்மை, நடப்பு அரசின் தோல்வி மற்றும் பிரசாரத்தின்போது பதிலடி தருவது ஆகியவை பற்றி பயிற்சி வழங்கப்படும் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2. தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு.
3. மேற்கு வங்காளத்தில் சாலை விபத்து: பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு
மேற்கு வங்காள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று அறிவித்து உள்ளார்.
4. தமிழகத்தில் 21 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம் உள்பட 21 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்க மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் அமைச்சர் அறிவிப்பு
வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்குவதற்கு மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பரசன் அறிவித்துள்ளார்.