தேசிய செய்திகள்

மும்பையில் தசராவையொட்டி 7,852 கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை + "||" + 7852 cars and two wheelers sold in Mumbai for Dhasara

மும்பையில் தசராவையொட்டி 7,852 கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை

மும்பையில் தசராவையொட்டி 7,852 கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை
மும்பையில் தசராவையொட்டி 7,852 கார்கள், இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மும்பை,

தசராவையொட்டி பொது மக்கள் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை வாங்குவதை அதிர்ஷ்டமாக கருதுகின்றனர். எனவே எப்போதும் தசரா தினத்தன்று அதிகளவில் புதிய வாகனங்கள் ஷோம்ரூம்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும். 

இந்த ஆண்டு தசரா விற்பனைக்காக மும்பையில் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த 2 வாரங்களில் 2 ஆயிரத்து 818 கார்கள், 5 ஆயிரத்து 34 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் பதிவாகி உள்ளன. 

கடந்த ஆண்டு தசரா விற்பனைக்காக மும்பையில் 3 ஆயிரத்து 254 கார்களும், 8 ஆயிரத்து 217 இருசக்கர வாகனங்களும் பதிவாகி இருந்தன. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மும்பையில் மின்சார ரெயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. எனவே அலுவலகம், வேலைக்கு செல்ல பொது மக்கள் அதிகளவில் புதிய வாகனங்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சாப்பாடுதான் முக்கியம்....!திருமண மண்டபமே தீ பற்றி எரியும் போது பதற்றமின்றி ருசித்த விருந்தினர்
கல்யாண வீட்டில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த போதும் விருந்துக்கு வந்தவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2. சரியாக பாடம் படிக்காத குழந்தையை கண்டித்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்...!
குழந்தை சரியாக பாடம் படிக்காததால் கண்டித்த மனைவியை அவரது கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. 20 வயது இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை - அழுகிய நிலையில் சடலம் மீட்பு
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட 20 வயது நிரம்பிய இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளப்பட்டுள்ளது.
4. மும்பையில் நேற்று புதிதாக 213 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் தற்போது 9 ஆயிரத்து 799 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் காற்றின் தரம் மிகவும் மோசம்!
தலைநகர் டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் காற்று மாசு மோசமான நிலையை அடைந்துள்ளது.