தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146- பேருக்கு கொரோனா + "||" + India reports 14,146 new cases, 19,788 recoveries & 144 deaths in last 24 hrs, as per Union Health Ministry

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1.95 லட்சமாக உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 19,788- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 144- பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 719- ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 846- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 19 ஆயிரத்து 749- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 124- ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 41 லட்சத்து 20 ஆயிரத்து 772 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 97 கோடியே 65 லட்சத்து 89 ஆயிரத்து 540- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
புதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. நீலகிரி பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா; விடுதிக்கு சீல்
நீலகிரியில் பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
3. கொரோனாவுக்கு முதியவர் பலி
கொரோனாவுக்கு முதியவர் பரிதாபமாக இறந்தார்.
4. மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி
தென்ஆப்பிரிக்கா அல்லது ஒமிக்ரான் ஆபத்து நிறைந்த பிற நாடுகளில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
5. தமிழகத்தில் மேலும் 720 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.