கனமழை எச்சரிக்கை; உத்தரகாசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


கனமழை எச்சரிக்கை; உத்தரகாசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 17 Oct 2021 10:03 AM GMT (Updated: 2021-10-17T15:33:52+05:30)

கனமழை எச்சரிக்கை காரணமாக உத்தரகாசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்டில் வருகிற 18ந்தேதி (நாளை) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இதனால், ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, இன்று முதல் வருகிற 19ந்தேதி வரை ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.  இதுபற்றி உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மையம், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அக்டோபர் 18 ஆம் தேதி (அதாவது நாளை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் மயூர் தீட்சித் அறிவித்துள்ளார்.

Next Story