கனமழை எச்சரிக்கை; டேராடூனில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை


கனமழை எச்சரிக்கை; டேராடூனில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை
x
தினத்தந்தி 17 Oct 2021 11:35 AM GMT (Updated: 17 Oct 2021 11:35 AM GMT)

கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு டேராடூனில் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் நாளை மூடப்பட்டு இருக்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.



டேராடூன்,


வடமாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் வருகிற 18ந்தேதி (நாளை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இதனை தொடர்ந்து, ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, இன்று முதல் வருகிற 19ந்தேதி வரை ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.  இதுபற்றி உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மையம், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அக்டோபர் 18ந்தேதி (நாளை) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட மாஜிஸ்திரேட் மயூர் தீட்சித் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு டேராடூனில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் நாளை ஒரு நாள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேஷ் குமார்
வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.  இதனால் ஆயுத பூஜை, விஜய தசமியை முன்னிட்டு  வியாழன் முதல் திங்கள் வரை 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story