தேசிய செய்திகள்

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்பு ஏற்படவில்லை + "||" + Mumbai Reports No Covid Death For First Time Since Beginning Of Pandemic

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்பு ஏற்படவில்லை

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்பு ஏற்படவில்லை
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் முதல்முறையாக கொரோனா இறப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மராட்டியமும் ஒன்று. அம்மாநில தலைநகரான மும்பையானது கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்தது. 

மும்பையில் கொரோனா தொற்று தொடங்கிய நாட்களில் இருந்து, தொடர்ந்து பாதிப்பின் மூலம் உயிரிழப்புகளை சந்தித்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் முதல்முறையாக கொரோனா இறப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது மும்பையில் கொரோனா பாதிப்பானது தடுப்பூசியின் மூலம் கட்டுக்குள் வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 367 பேர் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த ஒன்றரை வருடங்களில் முதன் முறையாக கொரோனாவால் இறப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஒமிக்ரான் அச்சுறுத்தல்: மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஒமிக்ரான் கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை தற்போது உள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. ஜம்மு காஷ்மீர்: உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி.!
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஒமிக்ரான் மிதமான பாதிப்புகளையே ஏற்படுத்துகின்றன : தென் ஆப்பிரிக்க மருத்துவர் தகவல்
ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5. பேருந்து பயணம்,கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் கட்டாயம்; இங்கிலாந்து அறிவிப்பு
இங்கிலாந்தில் பேருந்து பயணம், கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு