தேசிய செய்திகள்

காஷ்மீரில் தொழிலாளர்கள் படுகொலை; ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு + "||" + Massacre of workers in Kashmir; Rs 2 lakh compensation notice

காஷ்மீரில் தொழிலாளர்கள் படுகொலை; ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

காஷ்மீரில் தொழிலாளர்கள் படுகொலை; ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு பீகார் முதல் மந்திரி ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளார்.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து உள்ளது.  இந்த மாத முதல் வாரத்தில் 7 பேர் வரை கொல்லப்பட்டனர்.  அவர்களில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியரும் அடங்குவர்.

இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஈத்கா பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  இதில் பானிப்பூரி விற்பனை செய்யும் அரவிந்த் குமார் ஷா என்பவர் கொல்லப்பட்டார்.  இவர் பீகாரின் பங்கா நகரை சேர்ந்தவர்.

இதேபோன்று புல்வாமாவில் சாகிர் அகமது என்ற நபரும் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார்.  இவர் உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் நகரை சேர்ந்தவர்.  பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இந்த நிலையில், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ நகரில், காஷ்மீரை சேராத தொழிலாளர்கள் சிலர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  இதில், 2 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில், அவர்கள் ராஜா ரேஷி தேவ் மற்றும் ஜோகிந்தர் ரேஷி தேவ் என தெரிய வந்துள்ளது.  சன்சன் ரேஷி தேவ் என்ற மற்றொரு நபர் காயமடைந்து உள்ளார்.  இவர்கள் 3 பேரும் பீகாரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  இதனை சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.  பண்டிகை காலங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலை அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு முதல்-மந்திரி நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் அறிவித்து உள்ளார்.  இதன்பின்பு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹாவை தொடர்பு கொண்டு தனது வருத்தத்தினையும் வெளிப்படுத்தி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2. தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு.
3. மேற்கு வங்காளத்தில் சாலை விபத்து: பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு
மேற்கு வங்காள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று அறிவித்து உள்ளார்.
4. தமிழகத்தில் 21 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம் உள்பட 21 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்க மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் அமைச்சர் அறிவிப்பு
வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்குவதற்கு மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பரசன் அறிவித்துள்ளார்.