தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 7,555 பேருக்கு தொற்று + "||" + Kerala reports 7,555 new Covid-19 cases, 74 deaths

கேரளாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 7,555 பேருக்கு தொற்று

கேரளாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 7,555 பேருக்கு தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்  7,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,45,115 ஆக உயர்ந்துள்ளது. தொற்று  பாதிப்பால் ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இதுவரை மொத்தம் 26,865  பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.  

தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 87,593 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து இன்று 10,773 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47.39 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 73,157 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 10.32 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 93.8 சதவிகிதம் (2,50,78,552) பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் 45.5 சதவிகிதம் (1,21,69,186 ) பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 2- வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 532- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் 54 ஆயிரத்தை கடந்த இன்றைய கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
3. கேரளாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது- பல ரயில்கள் ரத்து
கேரளாவில் உள்ள ஆலுவா ரயில் நிலைய யார்டில் சரக்கு ரயில் தடம் புரண்டது.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைவு
இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 15.88 சதவிகிதமாக உள்ளது.
5. இத்தாலியில் புதிதாக 1,55,697 பேருக்கு கொரோனா பாதிப்பு
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,55,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.