தேசிய செய்திகள்

‘இ-ஷ்ராம்’ இணையதளம்: பெண்களே அதிகம் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தகவல் + "||" + Over 4 crore unorganised workers registered on e-Shram portal

‘இ-ஷ்ராம்’ இணையதளம்: பெண்களே அதிகம் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தகவல்

‘இ-ஷ்ராம்’ இணையதளம்: பெண்களே அதிகம் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தகவல்
‘இ-ஷ்ராம்’ இணையதளத்தில் பதிவு செய்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களில் பெண்களே அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

நாடு முழுவதும் கோடிக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஆன்-லைன் பதிவு முறை ஒன்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இ-ஷ்ராம்’ எனப்படும் இணையதளத்தில் பதிவு செய்யும் இவர்களுக்கு நிரந்தர கணக்கு எண் ஒன்று வழங்கப்படுகிறது. இந்த பதிவு மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எளிதாக பெற முடியும். அத்துடன் இந்த கணக்கு வைத்திருக்கும தொழிலாளி ஒருவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.2 லட்சமும், காயமடைந்தால் ரூ.1 லட்சமும் நிவாரணமாக கிடைக்கும்.

இவ்வாறு பல்வேறு நலன்களை வழங்கும் இந்த இணையப்பதிவை இதுவரை 4.09 கோடி தொழிலாளர்கள் முடித்துள்ளனர். இதில் 50.02 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இதன் மூலம் ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. விவசாயம் மற்றும் கட்டிடத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களே அதிக அளவில் பதிவு செய்துள்ளனர். அதேநேரம் ஆடை, ஆட்டோமொபைல்,, மூலதன பொருட்கள், கல்வி, சுகாதாரம், சில்லரை விற்பனை, சுற்றுலா உள்ளிட்ட துறைகளை சேர்ந்த கணிசமான தொழிலாளர்களும் பதிவு செய்திருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக பதிவு செய்திருப்பதாகவும் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்றத்தில் பணியாற்றும் மூன்றில் 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை- எங்கு தெரியுமா...?
பிரிட்டானி ஹிக்கின்ஸ் மற்றவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்க தூண்டுதலாக இருந்தார்.
2. பெண்கள் பற்றிய சுவாரசியமான உளவியல் உண்மைகள்
ஆண்கள் ஒரு நாளுக்கு 5000 முதல் 7000 வார்த்தைகள் வரை பேசுவார்கள். பெண்கள் ஒரு நாளுக்கு 20,000 வார்த்தைகள் வரை பேசுவார்கள். பெண்களுக்கு, தான் பேசுவதை பிறர் கேட்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
3. உலக பெண்கள் டென்னிஸ் போட்டி: இன்று தொடங்குகிறது
‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.
4. “20 லட்சம் வேலைவாய்ப்புகள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்” - பிரியங்கா காந்தி தேர்தல் வாக்குறுதி..!
இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஆகியவற்றை பிரியங்கா காந்தி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.
5. தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களுக்கு அனுமதி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நவம்பரில் நடைபெறும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.