இந்தியாவில் 230 நாட்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைவு


இந்தியாவில் 230 நாட்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைவு
x
தினத்தந்தி 18 Oct 2021 4:25 AM GMT (Updated: 18 Oct 2021 4:53 AM GMT)

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிவு அடைந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,596- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 19,582- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 166- பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 81 ஆயிரத்து 315- ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 694- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 39 ஆயிரத்து 331- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 290- ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 12 லட்சத்து 05 ஆயிரத்து 162 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 97.79 கோடி ஆக உள்ளது. 

Next Story