தேசிய செய்திகள்

மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா + "||" + 20 inmates of Adharwadi Jail,Kalyan test positive for COVID19, admitted to Thane Civil Hospital: Jail authorities

மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா
மராட்டியம், சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக  குறைந்து வருகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த மராட்டியத்திலும் தற்போது வைரஸ் பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. மராட்டியத்தில் தினசரி  கொரோனா பாதிப்பு தற்போது 2 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. 

மும்பையில் முதல் முறையாக நேற்று தொற்று பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.  கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு தடுப்பூசிகளும் வேகமாக போடப்பட்டுவருகிறது. 

இந்த நிலையில், மராட்டியத்தின் கல்யாண் நகரில் உள்ள ஆதர்வாடி சிறையில் சிறைக்கைதிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த சிறைக்கைதிகள் தானே சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.13 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.60 கோடியாக உயர்ந்துள்ளது.
2. ஒருவருக்கு கொரோனா
புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. ஒருவருக்கு கொரோனா
ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 740- பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 765 பேர் குணம் அடைந்துள்ளனர்.
5. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,741- பேருக்கு கொரோனா
கொரொனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,679- ஆக உயர்ந்துள்ளது.