கொரோனா தடுப்பூசி: உத்தரகாண்ட் மாநிலம் சாதனை - பிரதமர் மோடி பாராட்டு
18 வயதுக்கு மேற்பட்ட 100% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக தேவ்பூமி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
டேராடூன்,
கொரோனாவிற்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் உத்தரகாண்டின் இந்த சாதனை மிக முக்கியமானது. உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியின் டுவிட்டர் தகவலுக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
'தேவ்பூமி மக்களுக்கு வாழ்த்துகள். கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் உத்தரகாண்டின் சாதனை மிக முக்கியமானது. உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நமது தடுப்பூசித் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். மக்களின் உதவியோடு இத்திட்டம் வெற்றிப் பெறும். பங்களிப்பு அவசியம் எனக் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story