கர்நாடகாவில் தொடக்கப்பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Oct 2021 4:30 PM GMT (Updated: 18 Oct 2021 4:30 PM GMT)

கர்நாடகாவில் தொடக்கப்பள்ளிகள் வரும் அக்டோபர் 25 முதல் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக அரசானது பள்ளிகள் திறப்பது தொடர்பாக இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், வரும் அக்டோபர் 25 முதல் தொடக்கப்பள்ளிகளை திறப்பது குறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி பள்ளி வகுப்புகள் நடைபெறும். இந்த வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு பெற்றோரின் ஒப்புதல் கடிதம் கட்டாயமாகும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இதனை பள்ளி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முக கவசங்களை கூடுதலாகப் பயன்படுத்த வேண்டும். 

வகுப்பறைகள் மற்றும் ஓய்வு அறைகள் போன்றவற்றை  தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story