கேரளாவில் மழை தொடர வாய்ப்பு- 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை


கேரளாவில் மழை தொடர வாய்ப்பு- 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Oct 2021 10:14 AM GMT (Updated: 19 Oct 2021 10:14 AM GMT)

கேரளாவில் மழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம், 

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் மழை நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மண்ணில் புதைந்தன. 

மேலும் அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மழையின் தாக்கம் சற்று குறைந்து இருந்ததால், மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35ஆக உயர்ந்து உள்ளது. 

இதனிடையே, கேரளாவில் மழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவனந்தபுரம், பத்தினம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கன்னூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை தொடர வாய்ப்புள்ளதால் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story