தேசிய செய்திகள்

நமது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்.. நீங்கள் டி20 விளையாடுவீர்களா? ஓவைசி விமர்சனம் + "||" + "Our Soldiers Have Died. Will You Play T20?" Asaduddin Owaisi Slams PM

நமது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்.. நீங்கள் டி20 விளையாடுவீர்களா? ஓவைசி விமர்சனம்

நமது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்.. நீங்கள் டி20 விளையாடுவீர்களா? ஓவைசி விமர்சனம்
இந்திய மக்களின் உயிரோடு காஷ்மீரில், பாகிஸ்தான் தினம் தினம் 20-20 விளையாடுகிறது என ஓவைசி கூறினார்.
ஐதராபத், 

ஐதராபாத் எம்.பியும் எஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி, பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்தியா விளையாட உள்ளதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து ஓவைசி கூறியதாவது:- “ பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் லடாக்கில் நமது பகுதியில் சீனா ஊடுருவியிருப்பது ஆகிய இரு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி ஒரு போதும் பேசமாட்டார். சீனா குறித்து பேச பிரதமர் மோடி பயப்படுகிறார்.   

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நமது வீரர்கள்  9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வரும் 24 ஆம் தேதி 20 ஓவர் போட்டியில் விளையாடுமா? இந்திய மக்களின் உயிரோடு  காஷ்மீரில் பாகிஸ்தான் தினம் தினம் 20-20 விளையாடுகிறது. பீகாரை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. உளவுத்துறையும்  உள்துறை அமைச்சரும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசின் தோல்வியையே இது காட்டுகிறது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. கேரள முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி பேச்சு
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
2. பசி, வறுமையை ஒழித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - கபில் சிபல் கிண்டல்
உலக பட்டினிக் குறியீடு 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ம் ஆண்டில் இந்தியா 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
3. அப்துல் கலாம் பிறந்த நாள்: பிரதமர் மோடி புகழாரம்
இந்தியாவை வலிமையாகவும் வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல் கலாம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
4. பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் கரே நியமனம்
பிரதமர் மோடியின் ஆலோசகராக, ஓய்வு பெற்ற உயர் கல்வித் துறைச் செயலர் அமித் கரே நியமிக்கப்பட்டு உள்ளார்.
5. பல பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடி தேசத்திற்கு சேவை செய்து வருகிறார் - மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி
பல பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடி தேசத்திற்கு சேவை செய்து வருகிறார் என மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி புகாழாரம் சூட்டியுள்ளார்.