மராட்டியத்தில் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் திறப்பு


மராட்டியத்தில் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் திறப்பு
x
தினத்தந்தி 20 Oct 2021 9:26 AM GMT (Updated: 20 Oct 2021 9:39 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பேரிடர் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மும்பை,

மராட்டிய மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்ட மாணவ, மாணவிகள் மட்டுமே கல்லூரிகளில் நேரடி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்காக, ஆன்லைன் வகுப்புகளைத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாநிலத்தில், அக்டோபர் 4ஆம் தேதி 5 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களும் திறக்கப்பட்டுள்ளன.

கல்லூரிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் சக நண்பர்களை பார்த்து உற்சாகமடைந்தனர்.

Next Story