தேசிய செய்திகள்

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு + "||" + Negative RT-PCR test report mandatory for all international passengers coming to India: Ministry of Health

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு
இந்தியா வரும் சர்வதேச பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் மற்றும் இந்தியாவுடன் பரஸ்பர ஏற்பாடு செய்யப்பட்ட நாடுகளில் இருந்து உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

அதேபோல்,  விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  

அதேவேளையில் பகுதியளவு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அல்லது தடுப்பூசி போடாதவர்கள்,  கொரோனா பரிசோதனைகள் செய்து மாதிரிகளை வழங்க வேண்டும். வீட்டுத்தனிமையில் 7 நாட்கள் இருக்க வேண்டும் என்றும் புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அக்டோபர் 25 முதல் புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும் எனவும் மறு அறிவிப்பு வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசுக்கு அச்சம்: ராகுல் காந்தி விமர்சனம்
விவாதங்கள் இன்றி வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என ராகுல் காந்தி சாடியுள்ளார்.
2. புதிய வகை கொரோனா வைரஸ்: மத்திய அரசு என்ன செய்ய போகிறது..? - சுப்ரீம்கோர்ட்டு கேள்வி
புதிய வகை ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்று சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
3. சாலை விபத்தின் போது உதவி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு அறிவிப்பு
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும்.
4. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது ஏன்? - சரத் பவார் கருத்து
உத்தரப் பிரதேச தேர்தல் மட்டும் இல்லாவிட்டால் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றிருக்கப்படாது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
5. கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்
கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணயம் ஒழுங்கு முறை -2021 புதிய சட்ட மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.