இந்தியாவில் 95% மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை - உ.பி. பாஜக மந்திரி பேச்சு


இந்தியாவில் 95% மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை - உ.பி. பாஜக மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 21 Oct 2021 7:10 PM GMT (Updated: 21 Oct 2021 7:10 PM GMT)

பெட்ரோல் விலை தற்போது மிகக்குறைவாக உள்ளது என்று உத்தரபிரதேச பாஜக மந்திரி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச அரசில் மந்திரியாக செயல்பட்டு வருவர் உபேந்திர திவாரி. இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மந்திரி உபேந்திர திவாரி, இந்தியாவில் ஒருசிலரே 4 சக்கர வாகனம் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் தேவைப்படுகிறது. நாட்டில் 95% மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை. பொதுமக்களுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை தற்போது மிகக்குறைவாக உள்ளது’ என்றார்.

Next Story