தேசிய செய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடை விலக்கப்படுமா? - மத்திய அரசு விளக்கம் + "||" + Will the international air traffic ban be lifted? - Central Government Interpretation

சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடை விலக்கப்படுமா? - மத்திய அரசு விளக்கம்

சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடை விலக்கப்படுமா? - மத்திய அரசு விளக்கம்
கடந்த ஆண்டு முதல் அமலில் இருக்கும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை விலக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி, 

கொரோனா பரவலை தொடர்ந்து சர்வதேச விமான போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரம் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ‘ஏர் பபுள்’ முறையில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சிவில் விமான போக்குவரத்து செயலாளர் ராஜீவ் பன்சால், சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடை விரைவில் நீக்குவதற்கான வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘தற்போதைய ஏர் பபுள் முறையில் போதுமான விமானங்கள் இயக்கப்படுவதால், சர்வதேச விமான பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. விசா கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச வழித்தடங்களில் விமான போக்குவரத்துக்கான கூடுதல் தேவை இல்லை’ என்று தெரிவித்தார். கொரோனாவுக்கு முன்பு இருந்தது போன்ற தேவைகள் ஏற்பட்டால், சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை விலக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. புழல் சிறையில் ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஐகோர்ட்டு தடை
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் நடத்தி வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. புழல் சிறையில் ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஐகோர்ட்டு தடை
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் நடத்தி வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. சாலையில் வெள்ளநீர் ஓடுவதால்: பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் பகுதியில் 5-வது நாளாக போக்குவரத்துக்கு தடை
சாலையில் வெள்ளநீர் ஓடுவதால்: பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் பகுதியில் 5-வது நாளாக போக்குவரத்துக்கு தடை.
4. ஒமிக்ரான் பாதிப்பு; தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வர நேபாளம் தடை
ஒமிக்ரான் பாதிப்புகளை முன்னிட்டு தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வருவதற்கு நேபாளம் தடை விதித்து உள்ளது.
5. ஜி.வி.பிரகாசின் 'ஜெயில்' படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு
நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ஜெயில்' திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.