100 கோடி தடுப்பூசி சாதனை: புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி


100 கோடி தடுப்பூசி சாதனை: புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 22 Oct 2021 4:45 AM GMT (Updated: 22 Oct 2021 4:45 AM GMT)

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது, வரலாற்றின் புதிய அத்தியாயம் என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில்  டெல்லியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றியதாவது:-

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது, வரலாற்றின் புதிய அத்தியாயம். இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

நாட்டு மக்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் தான் 100 கோடி தடுப்பூசி சாதனை சாத்தியமானது.

257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா கடினமான இலக்கை எட்டி உள்ளது. நேற்று மிகப்பெரிய சாதனை படைத்து நாம் புதிய சரித்திரம் படைத்துள்ளோம்.

100 கோடி டோஸ் தடுப்பூசி என்பது புதிய சாதனையின் தொடக்கம் இந்தியாவின் தடுப்பூசித்திட்டம் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.

புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி தான் இந்த பரிசு. பெரும் மக்கள்தொகையை கொண்ட இந்தியா தடுப்பூசிகளை எப்படி பெறுவார்கள் எப்படி செலுத்துவார்கள் என கேள்விகள் எழுப்பட்டன.

தடுப்பூசிகள் செலுத்ததொடங்கிய போது முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதை தவிர்த்தோம். கடைக்கோடி மக்களுக்கும் தடுப்பூசி செல்வதை அரசு உறுதி செய்தது என்றார்.

Next Story