தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு + "||" + Maharashtra COVID-19 unlock: Cinema halls, theatres to reopen from today

மராட்டியத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு

மராட்டியத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு
மராட்டியத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வணிக வளாகங்கள், மைதானங்கள், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல  இன்று முதல் தியேட்டர்களை திறக்கவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சமூக இடைவெளியை உறுதி செய்ய தியேட்டர், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்களில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் தியேட்டர்கள் திறக்கக்கூடாது. 

பார்வையாளர்கள் முககவசம் அணிந்து இருக்க வேண்டும். தியேட்டர் வளாகத்தில் சானிடைசர் வைக்கப்பட வேண்டும். தியேட்டர் வளாகத்தில் யாரும் எச்சில் துப்பக்கூடாது. பார்வையாளர்களை உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு தான் அனுமதிக்க வேண்டும்.

இதேபோல பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும், அல்லது ஆரோக்கியசேது செயலியில் அவர் பாதுகாப்பாக உள்ளார் என குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். தியேட்டரில் குளிர்சாதன வசதி 24 முதல் 30 டிகிரி வரை இருக்கலாம் போன்ற கட்டுப்பாடுகளையும் மாநில அரசு வெளியிட்டுள்ளது. 

இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மராட்டிய துணை முதல் மந்திரி அஜித் பவார், “ தீபாவளி பண்டிகைக்கு பிறகும் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தால் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 699 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு
பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரமாக குறைந்தது
558 நாட்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
4. திருச்சி விமான நிலையத்துக்கு கொரோனா தொற்றுடன் வந்த பயணி
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்துக்கு கொரோனா தொற்றுடன் பயணி வந்தார். அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா
அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.